Asianet News TamilAsianet News Tamil

KS Sethumadhavan passes away: 10 தேசிய விருதுகள் பெற்ற... பிரபல இயக்குனர் சேதுமாதவன் காலமானார்!

10 தேசிய விருதுகள் மற்றும் 8 மாநில விருதுகளை வென்ற பிரபல மலையாள இயக்குனர் சேதுமாதவன் மறைவு திரையுலகை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

 

10 national award winner director ks sethumadhavan pass away
Author
Chennai, First Published Dec 24, 2021, 1:09 PM IST

10 தேசிய விருதுகள் மற்றும் 8 மாநில விருதுகளை வென்ற பிரபல மலையாள இயக்குனர் சேதுமாதவன் மறைவு திரையுலகை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் கே எஸ் சேதுமாதவன்,  இலக்கிய படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட பல உன்னதமான கதைகளை திரைப்படமாக இயக்கியவர். இந்நிலையில் இன்று டிசம்பர் 24, 2021 வெள்ளிக்கிழமை காலை தனது 90வது வயதில், கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார்.

10 national award winner director ks sethumadhavan pass away

இயக்குனர் சேது மாதவன், 1931 ஆம் ஆண்டு பாலக்காட்டில் சுப்ரமணியம் மற்றும் லட்சுமி ஆகியோருக்குப் மகனாக பிறந்தார். பாலக்காட்டில் உள்ள அரசு விக்டோரியா கல்லூரியில் உயிரியலில் பட்டப்படிப்பை முடித்தார். எழுத்தாளர் முட்டத்து வர்க்கியின், சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட ஞான சுந்தரி அவரது முதல் மலையாளப் படமாகும். இதுவரை 64 திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அவரது படங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான படங்கள் புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளின் தழுவல்களாகவே எடுக்கப்பட்டவை.

பி கேசவதேவின் நாவலை அடிப்படையாகக் கொண்ட ஓடையில் நின்று, தாஹம், ஸ்தானார்த்தி சாரம்மா, கூட்டுக்குடும்பம் வாழ்வே மாயம், ஆர நாழிக நேரம், அனுபவங்கள் பலிச்சங்கள், கரகானகடல், அச்சனும் பாப்பையும், புனர்ஜன்மம், சட்டகரி, மறுபரிசீலனை மற்றும் கன்னட மணக்காரி திரைப்படம் ஆகியவை அவரது இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது மற்றும் மாநில விருதுகளை பெற்று மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படங்கள் ஆகும்.  

அவரது அச்சனும் பாப்பாயும் திரைப்படம் 1973 இல் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படத்திற்கான நர்கிஸ் தத் விருதை வென்றது. மேலும் 1991 இல் தனது 'மறுபக்கம்' திரைப்படத்தின் மூலம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை தமிழுக்கு முதல் முறையாக பெற்று தந்தார். 1996 இல் அவரது தெலுங்கு திரைப்படமான 'ஸ்திரி தேசிய' விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

10 national award winner director ks sethumadhavan pass away

இயக்குனர் சேதுமாதவன் 1951 இல் இயக்குனர் கே ராமநாதனிடம் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் பத்தே வருடத்தில், அதாவது 1961 இல் 'வீரவிஜயா' என்ற சிங்களத் திரைப்படத்தின் மூலம் சுயாதீன திரைப்படத் தயாரிப்பாளராக மாறினார். மேலும் தற்போது உலக நாயகன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரரான  நடிகர் கமல்ஹாசனை 1962 இல் தனது 'கண்ணும் கரலும்' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும்.

இதுவரை சுமார் 6 மொழிகளில் 64 திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், தன்னுடைய படங்களுக்காக 10 தேசிய விருதுகள் மற்றும் 4 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயரால் திரைக்கதையில் எழுதப்பட்டு 1991 இல் வெளியான 'வேனல் கினவுகள்' திரைப்படம் தான் இவர் இயக்கிய கடைசி மலையாளத் திரைப்படமாகும். இவரது மகன் சந்தோஷ் சேதுமாதவன் கடந்த 2012 ஆம் ஆண்டு கிளாசிக் படமான 'சட்டக்கரியை' ரீமேக் செய்தார்.  திரையுலகில் மிகப்பெரிய சாதனையாளராகவே பார்க்கப்படும் இவரது மறைவு ஒட்டு மொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios