10 big boss contestant have a punishment

"பிக் பாஸ்" நிகழ்ச்சி தினம் தோறும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், பலரிடமும் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விதிக்க பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்று, உள்ளே இருப்பவர்கள் தமிழில் தான் பேச வேண்டும் ஆங்கிலம் உபயோக்கிக்க கூடாது என்பது.

இதனை மீறி நடந்ததாக நடன இயக்குனர் காயத்ரி, நடிகை நமீதா, மற்றும் ரைசா அவர்களுக்கு பிக் பாஸ் கன்சோல் அறைக்கு வரவழைக்கப்பட்டனர். மேலும் பிக் பஸ்ஸில், இவர்கள் அதிகமாக ஆங்கிலத்தில் பேசியதாக கூறி இவர்களுக்கு பதில் மீதம் உள்ள 10 போட்டியாளர்களுக்கு நீச்சல் தொட்டியில் அப்படியே விழவேண்டும் என கூறி தண்டனை கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து, கூறியுள்ள நமிதா இதுபோன்ற தண்டனை பெற்றது தனக்கு பெரிய அவமானத்தை தேடிக்கொடுத்துள்ளதாகவும் இப்படி நடந்ததற்கு நான் வருந்துவதாகவும் தெரிவித்தார்.