யு-டியூப்பை தெறிக்கவிட்ட ’ராமுலோ ராமுலா’பாடல்...அல்லு அர்ஜுன் ஹாப்பி அண்ணாச்சி...!

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ”அலா வைகுந்தபுரமுலோ” படம். இதில் தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் ’சாமஜவரகமனா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சோசிஷியல் மீடியாவையே அதிரவைத்தது. இந்நிலையில் இரண்டாவதாக வெளியிடப்பட்ட ’ராமுலோ ராமுலா’ பாடலும் யு-டியூப்பில் வெற லெவல் மாஸ் காட்டிவருகிறது. 

தெலுங்கில் எப்போதுமே மாஸ் ஹீரோக்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கூட ஏகப்பட்ட ஆயிரக்கணக்கில் லைக்குகளை வாங்கி குவிக்கும் என்றாலும், அல்லு அர்ஜுன் பாடல் தெறிக்க வைத்துள்ளது. யு-டியூப்பில் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதனால் 24 மணிநேரத்தில் யு-டியூப்பில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தென்னிந்திய பாடல் என்ற பெருமை ’ராமுலோ ராமு’விற்கு கிடைத்துள்ளது. <

/p>

இந்த பாடலை யு-டியூப்பில் தற்போது வரை 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதனால் செம குஷியான அல்லு அர்ஜுன்,  தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதனால் ”அலா வைகுந்தபுரமுலோ” படத்தை தெலுங்கு திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.