‘நான் இதுவரை எவ்வித குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. எனவே எந்த அரசியல்வாதியைப் பார்த்தும் பயப்படவேண்டிய  அவசியம் எனக்கு இல்லை’ என்று ’நோட்டா’ பட ஹீரோ விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.

நேற்று வெளியான ‘நோட்டா’ படம் தமிழக அரசியல்வாதிகளை அதிலும் குறிப்பாக அ.தி.மு.க.வின் ஆட்சியை பல விதங்களில் தோலுரித்துக்காட்டுவதாக உள்ளது.
ஷான் கருப்பசாமியின் ‘வெட்டாட்டம்’ நாவலை மூலமாகக் கொண்ட இப்படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டா, தனது முதல் நேரடி தமிழ்ப்படம் குறித்த வசூல் நிலவரம் மற்றும் மக்களின் ரியாக்‌ஷன்களைத் தெரிந்துகொள்வதற்காக தியேட்டர்களுக்கு விசிட் அடித்தார்’

அப்போது ‘இவ்வளவு வெளிப்படையாக அரசியல் பேசுகிற படத்தில் நடித்திருக்கிறீர்களே, தமிழக அரசியல்வாதிகளிடமிருந்து உங்களுக்கு மிரட்டல் எதுவும் வரவில்லையா?’ என்று கேட்டபோது, இதுவரை அப்படி எதுவும் வரவில்லை. அப்படி வந்தாலும் சந்திக்க தயாராகவே இருக்கிறேன். பொதுவாழ்க்கையில் எந்தத் தவறும் செய்யாதவன் என்கிற வகையில் நான் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

அது மட்டுமின்றி இப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் பல தமிழக மக்கள் கண்கூடாக கண்டவை. எனவேதான் தியேட்டரில் மக்கள் ஆரவாரம் செய்து ரசிக்கிறார்கள்.
இது மட்டுமல்ல அடுத்து நான் தமிழில் நடிக்கவிருக்கும் ‘டியர் காம்ரேட்’ படமும் கூட முழுக்க முழுக்க ஒரு அரசியல் படம்தான்’ என்றார். எங்க ஊரு அரசியல்வாதிங்க எவ்வளவு நல்லவங்கன்னு போகப்போக தெரிஞ்சுக்குவீங்க விஜய் தேவரகொண்டா.