மும்பையில் நடந்த ‘2.0’ புரமோஷன் நிகழ்ச்சிக்கு ரஜினி ஆப்செண்ட் ஆனது சர்ச்சையாகியிருந்த நிலையில், நேற்று தெலுங்கு பதிப்பு புரமோஷனுக்காக ஷங்கர்,ரஜினி,ஷங்கர் மூவரும் கைகோர்த்து ஹைதராபாத் சென்றனர்.
மும்பையில் நடந்த ‘2.0’ புரமோஷன் நிகழ்ச்சிக்கு ரஜினி ஆப்செண்ட் ஆனது சர்ச்சையாகியிருந்த நிலையில், நேற்று தெலுங்கு பதிப்பு புரமோஷனுக்காக ஷங்கர்,ரஜினி,ஷங்கர் மூவரும் கைகோர்த்து ஹைதராபாத் சென்றனர்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் இவர்கள் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அக்ஷய் குமார் ‘2.0’வின் படைப்பவன், காப்பவன், அழிப்பவன் ஆகிய மூவரும்... என்று கமெண்ட் போட்டுள்ளார்.
மும்பை புரமோஷன் நிகழ்ச்சியை ரஜினி தவிர்க்கவில்லை என்றும் அக்ஷய் குமாருக்கு தனி முக்கியத்துவம் தரக்கூடிய பிரஸ்மீட்டாக இருக்கவேண்டும் என்று ஷங்கர் விரும்பியதன் பேரிலேயே ரஜினி தவிர்க்கப்பட்டார் என்று பட நிறுவன வட்டாரங்கள் சொல்கின்றன.
இதை ஒட்டியே ’2.0’வில் தனது பாத்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக படத்தின் கால்வாசி கதையை ஓப்பனாக வெளியிட்டார் அக்ஷய் குமார். ‘இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பறவைகளுமானதுதான். இந்தப் பூமியில் வாழும் பிற உயிரினங்கள் மீது அக்கறை கொள்ளும் காட்சி படத்தில் உள்ளது.
விலங்குகளும் தாவரங்களும் மனிதர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கமுடியாது என்றாலும் இந்த மண்ணில் வாழ அவற்றுக்கு உரிமை உண்டு. எனவே இயற்கை அன்னையை நாம் சீரழிக்கக்கூடாது. எனவே இதுபோன்ற முக்கியமான கருத்தை 2.0 படம் எடுத்துரைக்கிறது. எனக்கு முழுக் கதையும் தெரியும். கதைக்கரு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தக் கதையை ஏன் இதுவரை எடுக்கவில்லை என்று ஆச்சர்யப்படுகிறேன்’’ என்கிறார் அக்ஷய் குமார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 27, 2018, 12:35 PM IST