TANCET 2022: டான்செட் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!!

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) தரவரிசைப் பட்டியலை 2022, இன்று (ஆகஸ்டு 25 ஆம் தேதி) சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (டிடிஇ) வெளியிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

When is Tamil Nadu TANCET Rank List 2022 Released?

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) தரவரிசைப் பட்டியல்  இன்று வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியவர்கள் டான்செட் 2022 தரவரிசைப் பட்டியலை tancet.annauniv.edu என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.  பட்டியலிடப்பட்டவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு விடப்படும். குறிப்பிட்ட தேதியில் தரவரிசைப் பட்டியல் வெளியாகும்பட்சத்தில், செப்டம்பர் 1ஆம் தேதி கவுன்சிலிங் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க;- TNPSC போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - குரூப் 5 தேர்வு தேதி வெளியானது.. முழு தகவல்கள் இதோ !!

எம்பிஏ மற்றும் எம்சிஏ சேர்க்கை கவுன்சிலிங் செயல்முறைக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் TANCET தரவரிசை பட்டியல் தயாரிப்பில் பரிசீலிக்கப்படுவார்கள். எம்சிஏ படிப்பை தொடர விரும்புபவர்கள் விண்ணப்பத்தில் அவர்களது விருப்பத்தை தெரிவித்து, செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கவுன்சிலிங்கிற்கான கட்டணத்தை கட்ட வேண்டும். 

இதைத் தொடர்ந்து தற்காலிக ஒதுக்கீடு அறிவிப்பு செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும், இதன் பின்னர் புரொவிஷனல் ஒதுக்கீடு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டான்செட் கவுன்சிலிங் பதிவு இறுதி தேதி - ஆகஸ்ட்  5, 2022
டான்செட் தரவரிசைப் பட்டியல்  - ஆகஸ்ட்  25, 2022
என்சிஏ கவுன்சிலிங் கட்டணம் - செப்டம்பர்  1 மற்றும்  2, 2022
டான்செட் எம்சிஏ புரொவிஷனல் ஒதுக்கீடு பட்டியல் - செப்டம்பட் 5, 2022
எம்பிஏ கவுன்சிலிங் கட்டணம் மற்றும் விருப்பத் தேர்வு - செப்டம்பர் 6 மற்றும் 8, 2022
டான்செட் எம்பிஏ புரொவிஷனல் ஒதுக்கீடு பட்டியல் - செப்டம்பர்  11, 2022
துணை கவுன்சிலிங் (MCA)- செப்டம்பர் 13, 2022
துணை கவுன்சிலிங் (MBA)- செப்டம்பர் 14, 2022
கவுன்சிலிங் இறுதி நாள் - செப்டம்பர் 15, 2022

எம்பிஏ விண்ணப்பதாரர்களுக்கான டான்செட் 2022 கவுன்சிலிங் பதிவு செப்டம்பர் 6 முதல் 8, 2022 வரை நடைபெறும். தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் செப்டம்பர் 9, 2022 அன்று வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 11, 2022 அன்று புரொவிஷனல் ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படும். 2022-23 கல்வியாண்டுக்கான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம். பிளான், எம்.ஆர்க் படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் அதன் துறைகள், கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்களில் சேருவதற்கு இந்தத் தேர்வு பொருந்தும்.

எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம். பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2022 டான்செட் நுழைவுத் தேர்வு நடப்பாண்டில் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை   36,710 பேர் எழுதினர். இந்த தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள இந்தப் படிப்புகளுக்காக எந்தக் கல்லூரிகளிலும் சேர முடியும்.

இதையும் படிங்க;-  ndtv:adani group: அதானி குழும அறிவிப்பு! என்டிடிவி பங்கு 14 ஆண்டுகளில் இல்லாதஉயர்வு: அடுத்து என்ன நடக்கும்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios