TNPSC குரூப் 5 தேர்வு தேதி அறிவிப்பு !! எப்போது..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரங்கள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 5 தேர்வுத் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் செப்டம்பர் 21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக குரூப்-1, குரூப்-3, குரூப்-2, குரூப்-2-ஏ, குரூப்-4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தொழில்நுட்பப் பணிகள் தொடர்பான காலி இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனித்தனியே தேர்வுகளை நடத்தி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
குரூப்-4 போட்டித் தேர்வு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை கொண்ட பணிகளுக்கும், குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-1 தேர்வுகள் பட்டப் படிப்பை அடிப்படைத் தகுதியாக கொண்டபதவிகளுக்கும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தற்போது குரூப்5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள சென்னை தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குரூப் 5ஏ தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்றில் இருந்து செப்டம்பர் 21 ஆம் தேதி வரைக்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !
குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 21 வரை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். புதிதாக பதிவு செய்வதற்கு ரூ.150 கட்டணமும், தேர்வு கட்டணம் ரூ.100-ம் செலுத்த வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. செப். 26 - 28ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம். டிசம்பர் 18ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !