மாதம் ரூ. 88,600 சம்பளம் - தேர்வு இல்லை.. நேர்காணல் மட்டுமே..உடனே விண்ணப்பிக்கலாம் !

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Uranium Corporation of India Limited Job notification

மெடிக்கல் ஆபிசர் (Medical Officer) பணிக்கான நேர்முக தேர்வு 08.08.2022 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2 காலி பணியிடங்கள் உள்ள இந்த பதவிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Uranium Corporation of India Limited Job notification

மெடிக்கல் ஆபிசர் பணிக்கு Indian Medical Council அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் PG Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.2 லட்சத்துக்கு மேல் சம்பளம்... கணக்கு அலுவலர் பணிக்கான தேர்வு தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 2 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ. 88,600/- முதல் அதிகபட்சம் ரூ. 1,06,320/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள். 

Uranium Corporation of India Limited Job notification

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதேபோல அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி தேவையான சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்களை எடுத்து கொள்வது அவசியம்.இந்த பணிக்கு எந்தவொரு தேர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios