திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் 73 டிரேட்ஸ்மேன் பணியிடங்கள். மத்திய அரசு வேலை, மாதம் ₹30,845 வரை சம்பளம். உடனே விண்ணப்பியுங்கள்.
மத்திய அரசின் பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் ஒன்றான திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் (Ordnance Factory Trichy) காலியாக உள்ள 73 டிரேட்ஸ்மேன் (Tradesman) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ITI முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைமுறை
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் தபால் என இரண்டு வழிகளிலும் விண்ணப்பிக்க வேண்டும். முதலில், அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து, அதன் பிரிண்ட் அவுட்டை எடுத்து, தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், NCVT-யில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் டிரேட் டெஸ்ட்/பிராக்டிகல் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்
• ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 22.08.2025
• ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.09.2025
• தபால் மூலம் விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 29.09.2025
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief General Manager,
Ordnance Factory Tiruchirappalli,
Tamilnadu -620016.
மேலும் தகவல்களுக்கு, அதிகாரபூர்வ அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு விண்ணப்பிப்பது அவசியம்.
