இந்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கி வரும் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப அலுவலர், உதவி ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்த 4,374 பணியிடங்கள் காலியாக உள்ளது. தகுதியும், ஆர்வமுள்ள இந்திய நாட்டை சேர்ந்த மாணவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம் :

தொழில்நுட்ப அலுவலர்

அறிவியல் உதவியாளர்

தொழில்நுட்ப நிபுணர்

நேரடி தேர்வு முறை – 212 பணியிடங்கள்

பயிற்சி திட்டம் – 4,162 பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

மொத்த காலியிடங்கள் : 4,374

கல்வித்தகுதி :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.E/ B.Tech/ B.sc படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு : 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்

நேரடி முறையில் தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ.21,700 அதிகபட்ச சம்பளம் ரூ.56,100 பெறுவர்

தேர்வு முறை : முதல் நிலை தேர்வு, அட்வான்ஸ் தேர்வு, திறனறி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவர். முதல்நிலை தேர்வில் கணிதம், அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அட்வான்ஸ் தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்

தேர்வு மையங்கள் : சென்னை, கோவை, கொல்கத்தா, புனே, உதய்ப்பூர், விஜயவாடா, விசாகப்பட்டினம். பாட்னா, மதுரை, எர்ணாகுளம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2023

விண்ணப்பிக்கும் முறை : https://barconlineexam.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்

விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்