தமிழ்நாடு போலீஸில் வேலை: ஆக.18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு காவல் துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர்கள் பதவிகளுக்கான நேரடித் தேர்வு 2023-க்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மொத்த காலிப் பணியிடங்கள்
இரண்டாம் நிலை காவலர் (மாநகர்/மாவட்ட ஆயுதப்படை), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு ஆயுதப்படை) இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர்கள் என மொத்தம் 3,359 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 2,576 பணியிடங்கள் ஆண்களுக்கும்ம், 783 பணியிடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பத் தேதி
அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, 2023 ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஆன்லைனின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 2023 செப்டம்பர் 19ஆம் தேதி ஆகும். எழுத்துத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்
மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதிய விகிதம் ரூ.18,200 - ரூ.67,100 என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 01-02-2023 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினு, சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். 1 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொண்டு படித்தவர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் மொத்த காலிப்பணியிடங்களில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.
IBPS Clerk 2023 : ஐபிபிஎஸ் கிளார்க் ப்ரிலிம்ஸ் ஹால் டிக்கெட் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி?
தேர்வுக் கட்டணம்
பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.tnusrb.tn.gov.in மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய வேலை அறிவிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.tnusrb.tn.gov.in/pdfs/NotificationCR2023.pdf இங்கு க்ளிக் செய்து பார்க்கவும்.