ரூ.1,15,000 சம்பளம்.. TNPSC வேலைவாய்ப்பு.. என்ன தகுதி? முழு விவரம் உள்ளே..
விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவுக் கட்டணமாக ரூ.150-ஐ மட்டும் செலுத்தி தங்களின் அடிப்படை விவரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்

தமிழ்நாடு மருத்து ஆய்வக கூடத்தில் காலியாக உள்ள இள்நிலை பகுப்பாய்வாளர் பதவிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.
தகுதி
ஃபார்மசி, வேதியியல் அல்லது பார்மாகியுட்டிக்கல் கெமிஸ்ட்ரி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். எனினும் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால் போதும்.
சம்பளம் : ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை சம்பளம் கிடைக்கும்
விண்ணப்பக்கட்டணம்
நிர்ந்தரப் பதிவுக்கட்டணம் – ரூ.150
எழுத்துத்தேர்வு – ரூ.100
தேர்வு கட்டண சலுகை/ விலக்கு விவரம் :
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
Group 4 Counselling: குரூப் 4 இளநிலை உதவியாளர் பணி.. கலந்தாய்வு எப்போது? எங்கே தெரியுமா?
விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவுக் கட்டணமாக ரூ.150-ஐ மட்டும் செலுத்தி தங்களின் அடிப்படை விவரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை, பதிவு செய்த நாளில் இருந்து 5 ஆண்டு காலத்திற்கு செல்லும். எனினும் நிரந்தர பதிவு எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது.
விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பு ஒவ்வொரு தேர்வுக்கு தனித்தனியே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த நிரந்தர பதிவுக்கட்டணம் விண்ணப்பக்கட்டணம் இல்லை. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மையங்கள்
இந்த பணியிடங்களுக்கு தேர்வு மையங்கள் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை :
எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகியவை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான நாள் : 21.09.2023
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் : 20.10.2023
விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் நாள் : 25.10.2023 முதல் 27.10.2023 வரை
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி:
முதல் தாள் : 05.12.2023 (காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை)
இரண்டாம் தாள் : 05.12.2023 ( மதியம் 2.30 முதல் 5.00 மணி வரை)
இந்த வேலைவாய்ப்பு குறித்த மேலும் விவரங்களுக்கு இதை கிளிக் செய்யவும்