Asianet News TamilAsianet News Tamil

Group 4 Counselling: குரூப் 4 இளநிலை உதவியாளர் பணி.. கலந்தாய்வு எப்போது? எங்கே தெரியுமா?

தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. 

Group 4 Junior Assistant Post... announcement of date of counselling tvk
Author
First Published Sep 22, 2023, 1:55 PM IST | Last Updated Sep 22, 2023, 1:55 PM IST

குரூப் 4 இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்குத் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 673 இளநிலை உதவியாளர் பட்டியல், பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது. பணிநாடுநர்களுக்குக் கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு கலந்தாய்வு நடைபெற உள்ளதால், பணிநாடுநர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள நாளில் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கலந்தாய்வு நடைபெறும் நாள்

25.09.2023 காலை 8 மணி (முற்பகல்) 

தேர்வாணைய பட்டியல்

1.175 வரையுள்ள பணிநாடுநர்கள்

26.09.2023  காலை 8 மணி (முற்பகல்) 

352-438 மற்றும் 440-526 வரையுள்ள பணிநாடுநர்கள்

25.09.2023 நண்பகல் 12 மணி (பிற்பகல்)

தேர்வாணைய பட்டியல் வரிசை எண் 176-322 வரை மற்றும் 324 351 வரையுள்ள பணிநாடுநர்கள்

26.09.2023 நண்பகல் 12 மணி (பிற்பகல்)

 527-641,643-664 666-667 மற்றும் 669.678 வரையுள்ள பணிநாடுநர்கள்

கலந்தாய்வு நடைபெறும் இடம்

Madras Christian College Boys Higher Secondary School, Chetpet, Chennai-31

இத்துடன் பணிநாடுநர்கள் பெயர் விவரப் பட்டியல் இணைத்து அனுப்பப்படுகிறது. 

நியமன அலுவலர்களான முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக வரம்புக்குட்பட்ட பணிநாடுநரின் விவரங்களைக் கண்டறிந்து பட்டியல் தயார் செய்து, அப்பணிநாடுநர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ள விவரங்களைக் குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும். தங்கள் ஆளுகைக்குட்பட்ட பணிநாடுநர்கள் அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும் 27.09.2023 அன்று பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளதால் அந்நாள் வரை பணிநாடுநர்கள் தங்கள் சொந்த செலவில் தங்கும் வசதி மற்றும் இதர வசதி ஏற்பாடு செய்து கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட வேண்டும்.

மேற்காணும் விவரங்களை அனைத்து பணிநாடுநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதையும் மற்றும் எந்த ஒரு பணிநாடுநரும் விடுபடவில்லை என்பதையும் உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios