டிகிரி முடித்தவர்களா நீங்கள்.. அப்படினா முந்துக்கள் மக்களே.. விண்ணப்பிக்கும் முறைகள்..!

தூத்துக்குடியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.08.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Thoothukudi District recruitment 2022

காலி பணியிடங்கள்:

தூத்துக்குடியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.08.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை


* விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றத்தற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

* விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

* தகுதியில்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

* எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

இதையும் படிங்க;- நீங்கள் பொறியியல் பட்டதாரியா..? 3 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..?

விண்ணப்பிக்கும் தேதி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை / திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதா இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இராண்டாவது தளம், கோரம்பள்ளம் 628101, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 10.08.2022 (புதன்கிழமை) மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

இதையும் படிங்க;- மாதம் ரூ.58,100 சம்பளம்.. 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு !

வட்டார இயக்க மேலாளர்மற்றும் வட்டார இயக்க ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான WWW.thoothukudi.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios