Asianet News TamilAsianet News Tamil

அயல்நாட்டில் அம்சமான வேலைவாய்ப்பு.. தமிழக அரசின் OMCL வெளியிட்ட அட்டகாச தகவல் - என்ன அது? முழு விவரம் இதோ!

Abroad Jobs : தமிழக அரசின் OMCL தற்போது வெளியிட்டுள்ள தகவலில் ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நர்ஸுகளாக பணிபுரிய பயிர்பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. 

Tamilnadu governments OMCL announced a new job offer how to apply full details ans
Author
First Published Mar 5, 2024, 2:33 PM IST

சென்னையில் கிண்டியில் அமைந்துள்ளது தான் தமிழக அரசு செயல்படுத்தி வரும் OMCL, அதாவது Overseas Manpower Corporation Limited. இந்தியாவைப் பொறுத்தவரையிலும் பல இளைஞர்கள் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்ய பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருவது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடந்து வரும் ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் வெகு சில சமயங்களில், அப்படி வெளிநாடு செல்ல ஆசைப்படும் இளைஞர்கள் ஏமாற்றப்படுவதும் உண்டு. அவற்றை தடுக்க தான் தமிழக அரசு இந்த OMCL என்ற ஒரு விஷயத்தை செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையை சார்ந்து வேலையை தேடும் இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதுதான் இந்த OMCLன் நோக்கம். 

மத்திய அரசு வேலைக்கு ரெடியா? 2,157 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு!

குறிப்பாக போலியான முகவர்களை நம்பி தமிழக இளைஞர்கள் ஒருபோதும் ஏமாந்து விடக்கூடாது என்பதில் தமிழக அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இதை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் அவர்கள் நேற்று மார்ச் 4ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இங்கிலாந்து, ஜெர்மனி, மற்றும் ஜப்பான் ஆகிய 3 நாடுகளில் இருந்து நர்ஸ் பணியிடங்களுக்கான தேவைப்பட்டியில் தற்பொழுது வந்துள்ளதாகவும். மேலும் அந்த நாடுகளுக்கு நர்சிங் பணிகளுக்காக செல்வதற்கு அந்த நாட்டிற்குரிய சிறப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அப்பணிக்கான நேர்காணலுக்கு தகுதியுடையவர்கள் ஆகின்றார்கள் என்றும் அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

ஆகவே ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நர்ஸ் பணிகளுக்கு செல்ல விருப்பமும் உள்ள அந்த துறை சார்ந்த படிப்புகளையும் முடித்த இளைஞர்கள் இதற்காக நடக்கவிருக்கும் சிறப்பு தேர்வுகளை எதிர்கொள்ள தற்பொழுது பயிற்சிகளை வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள நபர்கள் omcflt.24@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அவர்களுடைய கல்வித்தகுதி மற்றும் பிற விவரங்களை அனுப்ப வேண்டும். அதன் பிறகு மேற்குறிய வெளிநாட்டு வேலையில் இணைய பயிற்சி அளிக்கப்படும். தேர்வில் வெற்றிபெறுபவர்கள் வெளிநாடும் செல்ல முடியும். இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த இணையதளத்தின் மூலம் அல்லது OMCL மொபைல் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

போஸ்ட் ஆபீசில் 55,000 பேருக்கு வேலை இருக்கு! 10ஆம் வகுப்பு முடித்தவருக்கும் சூப்பரான வாய்ப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios