மத்திய அரசு வேலைக்கு ரெடியா? 2,157 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு!
மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் 2,157 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சங்களின் கீழ் செயல்படும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பல்வேறு பிரிவுகளில் 2,157 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
18 வயதை நிறைவு செய்த விண்ணப்பதார்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 42 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பணிகளுக்கு 25 முதல் 30 வயது வரை வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வயது வரம்பில் தளர்வும் உண்டு.
கூகுள் ப்ளேஸ்டோரில் மேட்ரிமோனி ஆப்ஸ் திடீர் நீக்கம்! சேவைக் கட்டண விவகாரத்தில் அதிரடி!
வெவ்வேறு பணிகளுக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பில் விரிவாக விளக்கியுள்ளது.
தென் மாநிலங்களில் வரும் மே மாதம் 6ஆம் தேதியில் முதல் 8ஆம் தேதிக்குள் கணினி தேர்வுகள் இருக்கலாம் என்று உத்தேசமாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 8 தேர்வு மையங்களும் புதுச்சேரியில் 1 தேர்வு மையமும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://ssc.gov.in க்குச் சென்று விண்ணப்பத்தைப் ட்வுன்லோட் செய்துகொள்ளலாம். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2024 (இரவு 23:00 மணி) என்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 19.03.2024 (இரவு 23:00 மணி) என்றும் கூறப்பட்டுள்ளது.
புவி வெப்பத்தைக் குறைக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஐடியா!