போஸ்ட் ஆபீசில் 55,000 பேருக்கு வேலை இருக்கு! 10ஆம் வகுப்பு முடித்தவருக்கும் சூப்பரான வாய்ப்பு!
தபால் துறையில் போஸ்ட்மேன் உள்பட பல்வேறு பணிகளுக்கு காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்பு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாக உள்ளது.
தபால் துறையில் போஸ்ட்மேன் உள்பட பல்வேறு பணிகளுக்கு காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்பு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாக உள்ளது.
மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த வேலைவாய்ப்புக்கு 10ஆம் வகுப்பு பாஸ் செய்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.81 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மாநில வாரியாக நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தகுதியுடனைய நபர்கள் பல்வேறு பணிகளில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். 2024ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு விபரம் வெளியாக உள்ளது.
2024ஆம் ஆண்டில் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், போஸ்ட் மேன், மெயில் கார்ட், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் என்ற ஐந்து பிரிவுகளில் 55,000 பேர் வேலை வழங்கப்பட உள்ளது.
போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிகளுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரை சம்பளம் வழங்கப்புடம். போஸ்ட்மேன், மெயில் கார்ட் பணிகளுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஊதியகம் கிடைக்கும். மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் கிடைக்கும்.
post office fd 1.j
வயது 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு மட்டும் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு கிடைக்கும்.