தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு. சம்பளம் ரூ.1,50,000 வரை. செப்டம்பர் 25, 2025-க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமையான இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் முதல் ஸ்பெஷலிஸ்ட் வரை பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு மூலம் திறமையான பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,50,000 வரை சம்பளம் பெற ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் முதல் ஸ்பெஷலிஸ்ட் வரை...
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, பல்வேறு பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. அவற்றில், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அசிஸ்டண்ட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்கள் முக்கியமானவை. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். அசிஸ்டண்ட் பணிக்கு ரூ.50,000 மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களுக்கு மாதம் ரூ.1,50,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதிக்கேற்ற பணியை தேர்ந்தெடுத்து விண்ணப்பிப்பதன் மூலம், உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரத்தைப் பெறலாம்.
கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் அசிஸ்டண்ட் பணிகளுக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கு, துறை சார்ந்த முதுகலை பட்டம் அவசியம். விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது. தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அரசு இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் tnrsmu2025@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் வழியாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 25, 2025.
