மொத்தம் 9,144 காலியிடங்கள்.. ரூ.63,000 வரை சம்பளம்.. இந்திய ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு..

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள டெக்னீசியன் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

RRB Recruitment 2024: 9144 Technician Vacancies check full details here Rya

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள டெக்னீசியன் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 9144 டெக்னீஷியன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கடந்த 9*ம் தேதி முதல் இந்த பணிக்கு விண்ணப்பிதற்கான பதிவு செயல்முறை கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்த பணிகளுக்கு விண்ணப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 8 ஆம் தேதி ஆகும்.

காலியிட விவரம் :

டெக்னீஷியன் கிரேடு 1 (சிக்னல்) - 1092

டெக்னீசியன் கிரேடு 3 - 8052

கல்வித்தகுதி

டெக்னீஷியன் கிரேடு 1 (சிக்னல்) :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் கணினி அறிவியல்/ இயற்பியல்/ மின்னணுவியல்/ தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டெக்னீஷியன் கிரேடு 3 : 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ படித்திருக்க வேண்டும். 

போஸ்ட் ஆபீசில் 55,000 பேருக்கு வேலை இருக்கு! 10ஆம் வகுப்பு முடித்தவருக்கும் சூப்பரான வாய்ப்பு!

வயது வரம்பு :

டெக்னீஷியன் கிரேடு 1 (சிக்னல்)  பணிக்கு விண்ணப்பிப்போ  18 வயது 36 வயதுக்குள் இருக்க வேண்டும். 
டெக்னீஷியன் கிரேடு 3 :  18 ஆண்டுகள் 33 வயது வரை இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

படி 1: விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான @indianrailways.gov.in ஐப் பார்வையிட வேண்டும்.
படி 2: முகப்புப் பக்கத்tஹில் உள்ள recruitment section பிரிவை கிளிக் செய்ய வேண்டும்.
படி 3: ஆட்சேர்ப்பு பிரிவில், Railway Technician Recruitment 2024 என்ற பிரிவைக் கண்டுபிடிப்பார்கள்.
படி 4: அதன் பிறகு, அவர்கள் "“Apply Online” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 5: இங்கே, அவர்கள் தங்கள் அனைத்து விவரங்களையும் (பெயர், பதிவு எண், பிறந்த தேதி போன்றவை) உள்ளிட வேண்டும்.
படி 6: இப்போது, தகுதிச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அடையாளச் சான்றுகள் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
படி 7: இறுதியாக ஆன்லைன் கட்டண முறைகள் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
படி 8: இந்தப் படிவத்தைச் சமர்ப்பித்து, பின்னர் சேமிக்கவும்.

CBT-கணினி அடிப்படையிலான சோதனை
ஆவண சரிபார்ப்பு செயல்முறை
மருத்துவத்தேர்வு

சம்பளம் :  ரூ.19,900/- முதல் 63,200/- வரை

ரூ.1,60,000 சம்பளம்.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.. விவரம் இதோ..

விண்ணப்பக்கட்டணம் :

பொது / OBC / பிற பிரிவினர் ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / முன்னாள் ராணுவத்தினர் / பெண்கள் / திருநங்கைகள் / சிறுபான்மையினர் / பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ரூ.250 செலுத்தினால் போதும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios