10, 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் அஞ்சல் துறையில் கை நிறைய சம்பளத்தில் வேலை.. விவரம் இதோ !!
இந்திய அஞ்சலகத் துறையில் காலியாக உள்ள போஸ்ட்மேன் உள்ளிட்ட 98,000 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: India Post department
காலி பணியிடங்கள்: 98,083
பணியின் பெயர்: Posts Postman, male guards , Multi Tasking Staff
பணியிடம்: 23 மாநிலங்கள்
பணியின் விவரம்:
Post Man - 59,099
Male Guards - 1,445
Multi Tasking Staff - 37,539
மேலும் படிக்க:ஹாப்பி நியூஸ்.. மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்.. என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள் ..?
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
மேல் குறிப்பிட்டு பணிக்கான விண்ணப்ப பதிவு இந்த மாதம் முதல் தொடங்கியுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தினை பெற்று, அதனை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 - 32 இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் இருந்து சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
Postman, Mailguard : அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் 10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். MTS பணிக்கு கூடுதலாக கணினி அறிவு இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் Post Man பணிக்கு ரூ.35,370, Mail guard பணிக்கு ரூ.33,718 மாத சம்பளமாக வழங்கப்படும்.
மேலும் படிக்க:திருப்பதியில் இந்த தினங்களில் அனைத்து தரிசனமும் ரத்து.. 12 மணி நேரம் கோவில் மூடல்.. என்ன காரணம் தெரியுமா..?