பெண்களை முந்திய ஆண்கள்.. முதல் 50 இடங்களில் 10 பேர் மட்டுமே பெண்கள் - நீட் தேர்வு முடிவுகள் சொல்வது என்ன?

தேசிய அளவில் நீட் தேர்வில் (NEET UG 2023) முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 1,44,516 லட்சம் பேர் இத்தேர்வை எழுதிய நிலையில் 78,693 பேர் தகுதி பெற்றுள்ளனர். நீட் நுழைவுத் தேர்வில், தேசிய அளவில் மொத்தம் 20,38,596 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 11,45,976 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

Only 10 women in top 50 What do NEET UG 2023 results cut off mark increased say

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று (13 ஜூன்) இரவு வெளியானது. அதில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீஷின் மகன் பிரபஞ்சன் நீட் தேர்வு முடிவில் 720/720 பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் பிரபஞ்சன் முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த நீட் தேர்வில் முதல் இடம், 3-வது இடம், 6வது இடம் & 9-வது இடத்தை தமிழ்நாட்டு மாணவர்களே பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கௌஸ்டவ், சூர்யா சித்தார்த், வருன் ஆகியோர் முறையே 3, 6 மற்றும் 9வது இடத்தை பிடித்துள்ளார்கள்.

Only 10 women in top 50 What do NEET UG 2023 results cut off mark increased say

தேசிய அளவில் நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 1,44,516 லட்சம் பேர் இத்தேர்வை எழுதிய நிலையில் 78,693 பேர் தகுதி பெற்றுள்ளனர். நீட் நுழைவுத் தேர்வில், தேசிய அளவில் மொத்தம் 20,38,596 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 11,45,976 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 56.2 ஆகும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் (51.288 %) சற்று கூடுதல் ஆகும். நீட் நுழைவுத் தேர்வில், தேசிய அளவில் மொத்தம் 20,38,596 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 11,45,976 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 56.2 ஆகும். இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் (51.288 %) சற்று கூடுதல் ஆகும்.

மாணவர்களைப் பொறுத்த வரையில், 9.02 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 8.8 லட்சம்  பேர் மட்டுமே தேர்வை எதிர்க் கொண்டனர். இதில், 4, 90, 374 தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவிகளில் 56.6% பேரும், தேர்வெழுதிய மாணவர்களில் 55.6% பேரும் தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 50 நபர்கள் கொண்ட பட்டியலில், வெறும் 10 மாணவிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவு வெளியானது.. தமிழக மாணவர் பிரபஞ்சன் முதலிடம் பிடித்து அசத்தல்!

Only 10 women in top 50 What do NEET UG 2023 results cut off mark increased say

கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 18 ஆக இருந்தது. இந்த 10 பேரில், ஒரு மாணவி பட்டியல் இனத்தைச் சார்ந்தவராக இருக்கிறார். ஏனைய மாணவிகள் அனைவரும் பொது பிரிவு வகுப்பு பிரிவினர்களாக உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட  மற்றும் பட்டியல் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவிகள் யாரும் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. முதல் 10 இடங்களில், பிரஞ்சல் அகர்வால் என்ற மாணவி மட்டும் 4வது இடத்தைப் பெற்றுள்ளார்.

அதேபோல, நீட் கட்ஆப் மதிப்பெண் கடந்த 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன. பொது பிரிவினருக்கு 2021-ம் ஆண்டு 138 ஆக இருந்த கட்ஆப் மதிப்பெண் கடந்த 2022-ல் 117 ஆக இருந்தது. ஆனால் நடப்பு (2023) ஆண்டில், பொது பிரிவினருக்கான கட்ஆப் மதிப்பெண் 137 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், எஸ்.சி. எஸ்.டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு 2021-ம் ஆண்டு 108 ஆக இருந்த கட்ஆப் மதிப்பெண்  2022-ல் 93 ஆக இருந்த நிலையில், 2023-ல் 107 ஆக அதிகரித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒட்டு மொத்த மதிப்பெண்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாணவிகள், நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளில் மாணவர்களை விட சற்று பின்தங்கியே வருகின்றனர் என்று கல்வி ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் : முதல் 10 இடங்களில் 4 இடங்களை பிடித்த தமிழக மாணவர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios