நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
கடந்த மே 7-ம் தேதி நீட் இளநிலை மருத்துவ நுழைவு தேர்வு நடைபெற்றது. சுமார் 20 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில் நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்ச மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் தமிழ்நாடு, ஆந்திராவை சேர்ந்த மாணவர்கள் முதல் 2 இடங்களை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 99.99% முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார். பிரபஞ்சன், வருண் சக்ரவர்த்தி இருவருமே 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரஞ்சல் அகர்வால் மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் அவர் 4-வது இடத்தில் உள்ளார்.

