JEE Main Result 2022: ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ளுவது எப்படி..?
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022- 2023 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் மாதத்திற்கான தேர்வு ஜூன் 23,24,25,26,27, 28, 29 ஆகிய 7 நாட்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் 501 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வினை எழுதினர்.
மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர போறீங்களா..? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விபரம்..
மேலும் இரண்டு தேர்வுகளில் மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும் என்று தேர்வு அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாத தேர்வுக்கான மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மே மாத தேர்வு முடிவடைந்த பிறகு, முழு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.
மேலும் படிக்க:கவனத்திற்கு !! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்..
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் Download Score Card of JEE(Main) Session 1_Paper 1 என்ற இணைப்பில் சென்று விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி, இரகசிய எண் ஆகிய விவரங்களை அளித்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க:மாணவர்கள் கவனத்திற்கு!! பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு.. முழு விபரம்..
நாட்டில் உள்ள 31 தேசிய தொழில்நுட்பக் கழகம் , இந்திய பொறியியல் அறிவியல் தொழில்நுட்பக் கழகம், 26 தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை ஜேஇஇ முதன்மை தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது.இந்த கலந்தாய்வை கூட்டு இட ஒதுக்கீடு ஆணையம் மேற்கொள்ளும். இந்தாண்டிற்கான கலந்தாய்வு 6 மட்டங்களாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்ப பதிவு, பணம் செலுத்துதல், இடத்தை தேர்ந்தெடுத்தல், உறுதிப்படுத்துதல் ஆகிய அனைத்தும் ஆன்லைன் முறையில் முழுமையாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.