ரூ.1,80,000 வரை சம்பளம்! NHPC நிறுவனத்தில் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
NHPC லிமிடெட் நிறுவனம் பயிற்சி அலுவலர் (ஹெச்ஆர், பிஆர், சட்டம்) மற்றும் மூத்த மருத்துவ அதிகாரிகள் உட்பட 118 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.
NHPC லிமிடெட் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பயிற்சி அலுவலர் (ஹெச்ஆர், பிஆர், சட்டம்) மற்றும் மூத்த மருத்துவ அதிகாரிகள் உட்பட 118 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.. இந்தியா முழுவதும் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ NHPC இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..
என்ஹெச்பிசி லிமிடெட் காலியிட விவரம்
பதவியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் |
பயிற்சி அதிகாரி (HR) | 71 | ரூ. 50,000 – ரூ. 1,60,000 |
பயிற்சி அதிகாரி (PR) | 10 | ரூ. 50,000 – ரூ.1,60,000 |
பயிற்சி அதிகாரி (சட்டம்) |
12 | ரூ.50,000 – ரூ. 1,60,000 |
மூத்த மருத்துவ அதிகாரி | 25 | ரூ.60,000 ரூ.ரூ,80,000 |
கல்வித்தகுதி
பயிற்சி அதிகாரி (HR) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் HR/Personnel Management/Industrial Relation இல் 60% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி அதிகாரி பி.ஆர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 60 சதவீத மதிப்பெண்களுடன் மாஸ் கம்யூனிகேஷன்/ஜர்னலிசத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி அதிகாரி (சட்டம்) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 60% மதிப்பெண்களுடன் சட்டத்தில் பட்டதாரி பட்டம் (LLB) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மூத்த மருத்துவ அதிகாரி எம்.பி.பி.எஸ் மற்றும் செல்லுபடியாகும் பதிவு மற்றும் 2 வருட பிந்தைய இன்டர்ன்ஷிப் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; ஐசிஎஃப் தொழிற்சாலையில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!
விண்ணப்பக்கட்டணம் :
UR, EWS மற்றும் OBC (NCL) வகைகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் திரும்பப்பெற முடியாத கட்டணமாக ₹600 மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் (₹708 உட்பட) செலுத்த வேண்டும். SC, ST, PwBD, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்களுக்கு பதிவுக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறையானது தகுதித் தேர்வுகளில் (UGC NET Dec-2023/Jun-2024, CLAT PG-2024 அல்லது MBBS மொத்தம்) பெற்ற மதிப்பெண்களை உள்ளடக்கியது, அதைத் தொடர்ந்து குழு விவாதம் (GD) மற்றும் தனிப்பட்ட நேர்காணல் (PI). அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதித் தேர்வானது தகுதித் தேர்வுகள், GD மற்றும் PI ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மதிப்பெண்ணைக் கருத்தில் கொள்ளும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ NHPC இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் தங்கள் UGC NET, CLAT அல்லது MBBS சான்றுகளைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும், ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் மற்றும் அனைத்து விவரங்களும் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மத்திய அரசு வேலை; கைநிறைய சம்பளம்; டிகிரி போதும்.; உடனே விண்ணப்பீங்க!
கடைசி தேதி
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 30, 2024 ஆகும். டிசம்பர் 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு பின் ஆன்லைன் போர்ட்டல் மூடப்படும்