MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • மத்திய அரசு வேலை; கைநிறைய சம்பளம்; டிகிரி போதும்.; உடனே விண்ணப்பீங்க!

மத்திய அரசு வேலை; கைநிறைய சம்பளம்; டிகிரி போதும்.; உடனே விண்ணப்பீங்க!

மத்திய அரசின் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 110 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

2 Min read
Author : Rayar A
Published : Dec 09 2024, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
General Corporation of india's Job

General Corporation of india's Job

அரசு வேலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவுடன் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இத்தகைய இளைஞர்கள் பயனளிக்கும்விதமாக மத்திய அர்சு நிறுவன‌ம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காப்பீட்டு நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (ஜிஐசி) (General Corporation of India - GIC) உதவி மேலாளர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்காக அறிவிப்பு செய்துள்ளது. மொத்தம் 110 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வித்தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரிவாக காண்போம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
General Goverment Job

General Goverment Job

என்னென்ன பணியிடங்கள்?

* உதவி மேலாளர் (பொது) பதவிக்கு 18 காலியிடங்கள் உள்ளன.

* லீகல் பதவிக்கு 9 காலியிடங்களும், மனித வளம் (HR) பதவிக்கு 6 காலியிடங்களும் உள்ளன.  

* என்ஜினியரிங் பதவிக்கு மரைன், ஏரோநெட்டிக்கல், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் ஆகிய பிரிவுகளில் தலா 1 காலியிடங்கள் என மொத்தம் 5 காலியிடங்கள் உள்ளன.

* நிதி பிரிவில் 18 காலியிடங்களும், காப்பீடு பிரிவில் 20 காலியிடங்களும் உள்ளன. 

* இதேபோல் காப்பீட்டு தொகை கணக்கிடுபவர் பதவிக்கு 2 காலியிடங்களும், மெடிக்கல் பிரிவில் 2 காலியிடங்களும் உள்ளன. 

* கடைசியாக ஐடி பிரிவில் 22 காலியிடங்களும், காப்பீடு பிரிவில் 20 காலியிடங்களும் உள்ளன.

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; ஐசிஎஃப் தொழிற்சாலையில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

34
State Goverment Job

State Goverment Job

கல்வித்தகுதி என்னென்ன?

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மனித வளம் பணிக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் HRM / பணியாளர் மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். கட்டாயம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நிதி பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை, MBA/CFA / CA / CMA ஆகிவயற்றில் தேர்ச்சி பெற்ற்றிருப்பது அவசியமாகும்.

தேர்வு நடைமுறை, வயது வரம்பு என்ன? 

மேற்கண்ட பதவிக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, குரூப் டிஸ்கசன், நேர்முகத்தேர்வு மற்றும் மெடிக்கல் பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம் ரூ.1,000 ஆகும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயதும் அதிகப்பட்சம் 30 வயதும் இருக்கலாம். விண்ணப்பத்தாரர் 2.11.1994 தேதிக்கு முன்பும், 1.11. 2003 தேதிக்கு பின்பும் பிறந்திருக்கக்கூடாது. 

எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது தளர்வு உண்டு. 

44
Jobs in Tamilnadu

Jobs in Tamilnadu

எவ்வளவு சம்பளம்? 

உதவி மேலாளராக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் கிடைக்கும். 

எப்படி விண்ணப்பிப்பது? 

தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதரர்கள் https://ibpsonline.ibps.in/gicionov24/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 19.12.2024 ஆகும். ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி 05.01.2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதி பின்னர் மாறுபடலாம்.  மேலும் விவரங்களுக்கு https://www.gicre.in/en/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பேங்கில் காத்திருக்கும் வாட்ச்மேன் வேலை; இன்னும் 5 நாள் தான் இருக்கு!

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image2
DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?
Recommended image3
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved