ஸ்ரீரங்கம் கோயிலில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

திருச்சியில் ஸ்ரீரங்கம் கோயிலில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job vaccancies announced in trichy srirangam temple

திருச்சியில் ஸ்ரீரங்கம் கோயிலில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி  காவலர்கள், துப்புரவு பணியாளர், தூர்வை பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரங்கள்:

பதவியின் பெயர்:

  • காவலர்கள்
  • துப்புரவு பணியாளர்
  • தூர்வை

காலிப்பணியிடங்கள்:

  • 144 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு… விண்ணப்பிப்பது எப்படி? யார் விண்ணப்பிக்கலாம்?

தகுதி:  

  • குறைந்தபட்ச தகுதிகளாக, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • அக்டோபர் 17 ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 
  • தேர்வர்கள் விண்ணப்பிக்க , நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் 1000... மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில்  https://srirangamranganathar.hrce.tn.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • home page- ல்  வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் நிபந்தனைகள் நாள் 17.9.22 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
  • புதிதாக தோன்றிய பக்கத்தில், பணி குறித்தான வேலைவாய்ப்பை அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • அடுத்ததாக விண்ணப்ப அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ, தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முகவரி: 
                      இணை ஆசிரியர்/ செயல் அலுவலர், 
                      Arulmigu Aranganatha Swamy Temple, 
                      Srirangam - 620006, 
                      Thiruchirappalli District

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios