Asianet News TamilAsianet News Tamil

9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் 1000... மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு 8ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு மாணவ - மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

1000 per month from 9th to 12th standard...can apply for Central Govt.
Author
First Published Oct 6, 2022, 4:56 PM IST

நான்கு ஆண்டுகளுக்கு 8ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு மாணவ - மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. உதவித்தொகை விண்ணப்பம் குறித்து விரிவான தகவல்கள் பின்வருமாறு:-

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இதற்காக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது.  இந்த வரிசையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மாணவர்கள் மேற்படிப்பு தொடர அவர்களது கல்வி தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசின் கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது இந்த வரிசையில் தமிழகத்தில் 6 ஆயிரத்து 695 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  National means cum merit scholarship scheme  என்ற தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.  

1000 per month from 9th to 12th standard...can apply for Central Govt.

இதில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம், அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதில் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை தொடரும், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு 5% தளர்வு வழங்கப்படுகிறது.

உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி: 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் ஊராட்சி நகராட்சி மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கு முடியாது. இதேபோல் கேந்திர வித்யாலயா, ஜவஹர் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டாது. இந்த தேர்வு எழுதும் மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் வைத்திருக்கவேண்டும், எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு 5% தளர்வு வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: 41 ஆயிரம் கோடி யாருடையது.? இபிஎஸ்சை எச்சரித்த ஜேசிடி பிரபாகர்.? தமிழக அரசு விசாரிக்க வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்

மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3.5 லட்சத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. தேர்வுக்கு என தனி பாடத்திட்டங்கள் இல்லை, 7ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மனத்திறன் மற்றும் உதவித்தொகை  சார் திறன் என்ற இரண்டு தாள்களுக்கு தேர்வு  நடத்தப்படும் இரண்டு தாள்களிலும்  மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும், தேர்வுகளில் குறைந்தது 40 சதவீதம் மதிப்பெண்களை பெற வேண்டும், இரண்டிலும் சேர்ந்து 55 சதவீதம் குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

1000 per month from 9th to 12th standard...can apply for Central Govt.

ஆண்டுக்கு 12,000 என்ற வீதம் 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும், அந்த வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் வரவு வைக்கப்படும். 2022ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வுக்கு மாணவர்கள் அக்டோபர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வித் தொகை பெற  http://scholarship.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

இதையும் படியுங்கள்: தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு; சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்;- தமிழிசை சவுந்திரராஜன்

விண்ணப்பிக்கும்போது ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, பள்ளிகளில் தேர்வுக்கு  முந்தைய சரிபார்க்கும் போது மாணவர்கள் வருமானச் சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இன்னிக்கு பத்து மற்றும் அது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை தீர்க்க https://scholarships.gov.in/public/schemeGuidelines/NMMSS_FAQ.pdf என்ற லிங்கை கிளிக் செய்து படிக்கவும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios