திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின், பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள Input Routes, Door Step Veterinary and Emergency Health Service பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

காலி பணியிடங்கள்: 

பணியின் பெயர்: Input Routes, Door Step Veterinary and Emergency Health Service

பணியிடங்கள்: 8

கல்வித் தகுதி:

இந்த பதவிகளுக்கு B.V.Sc., (கால்நடை மருத்துவ படிப்பு) மற்றும் A.H (animal husbandry) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு குறித்து தெரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சூப்பர் வேலை.. முழு விவரம்

சம்பள விவரம்: 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு மாதந்தோறும் ரூ.43,00 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. 

விண்ணப்பிக்கும் தேதி: 

இந்த மாதம் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம். மேலும் சுய விவரம், மற்றும் தேவையான கல்வி சான்றிதழ்களின் நகல்கள் சேர்ந்த விண்ணப்பத்தினை கொண்டு செல்ல வேண்டும். www.aavin.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

முகவரி:

Tirupur District Co-oprative,

Milk Producers Union Limited,

Aavin Milk Chilling Centre,

Veerapandi Pirivu,

Palladam Road,

Tirupur - 641 605
மேலும் படிக்க:8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. மாதந்தோறும் ரூ.50,000 வரை சம்பளத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் வேலை..