மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடித்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board - MRB) வெளியிட்டுள்ளது.
பணி விவரம்:
பதவி:
- கண் மருத்துவ உதவியாளர் (ophthalmic assistant)
காலிப்பணியிடங்கள்:
- கண் மருத்துவ உதவியாளர் - 93
கல்வித் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அரசு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கண் மருத்துவ படிப்புகளில் (Ophthalmic Assistant course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும்.
- Optometry துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு படித்தால் போதும்.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் காத்திருக்கிறது தமிழக அரசு வேலை !!
சம்பள விவரம்:
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
- இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
- இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும்.
- இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
இதையும் படிங்க: இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு.... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
விண்ணப்பிக்கும் முறை:
- https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ.300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி:
- 09.03.2023