மத்திய பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!
மத்திய பாதுகாப்பு துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய பாதுகாப்பு துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. \
பணி விவரம்:
பதவிகள்:
- டிரேஸ்மேன் (Tradesman)
- ஃபையர்மேன் (Fireman)
காலிப்பணியிடங்கள்:
- டிரேஸ்மேன் (Tradesman) - 1249
- ஃபையர்மேன் (Fireman) - 544
மொத்த பணியிடங்கள் - 1793
இதையும் படிங்க: இந்தியா எரிசக்தி வார மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு மெஸ்ஸி டிஷர்ட் பரிசு
பணியிட விவரம்:
கல்வித் தகுதி:
- டிரேஸ்மேன் பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10வது அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், தொழில்துறை சார்ந்து பயிற்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஃபையர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க 10வது அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
- 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியதன் எதிரொலி.... தமிழகத்திற்கு குழுவை அனுப்பியது மத்திய அரசு!!
சம்பள விவரம்:
- டிரேஸ்மேன் மேட் (Tradesman Mate) - ரூ. 18,000 முதல் ரூ.56,900 வரை
- ஃபையர்மேன் - Level 2 - ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
தேர்வு செய்யும் முறை:
- இதற்கு உடற்தகுதி தேர்வு, திறனறிவு தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
- ஆன்லைனின் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- https://www.aocrecruitment.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி:
- 26.02.2023