பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியதன் எதிரொலி.... தமிழகத்திற்கு குழுவை அனுப்பியது மத்திய அரசு!!

நெல்கொள்முதல் விதிகளில் தளர்வு கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் முதல்வரின் கோரிக்கையை ஏற்று பயிர் சேதத்தை கணக்கிட குழுவை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது. 

central govt sent a team to tamilnadu in response to cm stalins request

நெல்கொள்முதல் விதிகளில் தளர்வு கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் முதல்வரின் கோரிக்கையை ஏற்று பயிர் சேதத்தை கணக்கிட குழுவை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது. இதுதொடர்பான மத்திய அரசின் அறிக்கையில், தமிழ்நாடு அரசிடம் இருந்து நெற்பயிர் சேதம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற கடிதத்தின் அடிப்படையில், ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈபிஎஸ் தரப்புக்கு கிடைத்தது இரட்டை இலை சின்னம்... தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்!!

எஸ்.பிரபாகரன் என்பவரது தலைமையிலான இந்த குழுவில் 3 பேர் இடம்பெற்றுள்ளனர். அந்த குழுவானது தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் மாதிரிகளை சேகரித்து உடனடியாக ஆய்வு செய்து, அதுதொடர்பான முடிவுகளை உடனடியாக மத்திய உணவு அமைச்சகத்திற்கு அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தாமதம் கூடாது... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரை தளர்த்தவும், சேதமடைந்த. நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறும் வலியுறுத்தி இருந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios