திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தகவல் பகுப்பாளா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. 

பதவி: 

  • தகவல் பகுப்பாளா்

ஊதியம் விவரம்: 

  • ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிக்கு மாதம் ரூ.18,536 தொகுப்பூதியம் வழங்கப்படும். 

இதையும் படிங்க: சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரத்து... மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!

கல்வித் தகுதி:

  • இதில் விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி (பிசிஏ) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

  • விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு இன்றியமையாததது… ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!!

இந்தப் பணியானது மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் இதனை அடிப்படையாக கொண்டு எந்தவிதமான அரசுப் பணியும் கோர இயலாது. 

விண்ணப்பிக்கும் முறை: 

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபா்கள் கல்விச் சான்று நகல்கள், அனுபவச் சான்று மற்றும் புகைப்படத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு டிசம்பா் 10 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். 

முகவரி: 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 
அறை எண்: 633, 6வது தளம், 
மாவட்ட கலெக்டர் அலுவலகம், 
திருப்பூா். 

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971198 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை திருப்பூா் மாவட்ட இணையதளம் https://tiruppur.nic.in/ta/notice இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.