டிகிரி முடித்தால் போதும்! ரூ.1,20,000 வரை சம்பளம்! பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 350 புரொபேஷனரி இன்ஜினியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.40,000 - ரூ.1,20,000 வரை சம்பளம். ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மத்திய பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL or Bharat Electronics Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு போபால், அரித்வார், ஐதராபாத், சான்சி, திருச்சி, ராணிப்பேட்டை ஆகிய ஊர்கள் உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
இந்நிலையில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ BEL இணையதளத்தில் பார்வையிடவும்.
மொத்த காலிப்பணியிடங்கள்:
350
பணியின் விவரங்கள் :
புரொபேஷனரி இன்ஜினியர் ( எலக்ட்ரானிக்ஸ்) - 200 புரொபேஷனரி இன்ஜினியர் (மெக்கானிக்கல்) - 150
மாத சம்பளம்:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ. 40,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி:
* இன்ஜினியர் எலக்ட்ரானிக்ஸ் பணியிடத்திற்கு பொறியியல் துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகம்/கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல்/கணினி அறிவியல்/எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
* மெக்கானிக்கல் பணியிடத்திற்கு இன்ஜினியரிங் டிகிரியில் மெக்கானிக்கல் பிரிவை எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்.சி/எஸ்.டி 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வரம்பு 10 ஆண்டுகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்வது எப்படி?
கணினி வழி தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடங்கள்:
கணினி வழியிலான ஆன்லைன் தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமும் கல்வி தகுதியும் இருக்கும் தேர்வர்கள் https://bel-india.in/job-notifications/ - என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
ஜனவரி 31ம் தேதி