இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வரும் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதி மற்றும் சம்பளம்: 

இந்திய விளையாட்டு ஆணையத்தில்‌ காலியா உள்ள மசாஜ்‌ தெரபிஸ்ட்‌ பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 104 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சியுடன்‌ மசாஜ்‌ தெரபிஸ்ட்‌ பயிற்சியில்‌ சான்றிதழ்‌ பெற்றிருப்பதுடன்‌ பணி அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:காலியாக 1,089 அரசு பணியிடங்கள்.. நவம்பர் 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வு.. எப்போது..? எப்படி விண்ணப்பிப்பது..?

தேர்வு செய்யும் முறை:

இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய, இந்திய விளையாட்டு ஆணையத்தால் எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது. தகுதி, பணி அனுபவம்‌ மற்றும்‌தேர்வில்‌ பெறும்‌ மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ தகுதியானவர்கள்‌ தேர்வு செய்யப்படுவர்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதற்கு விருப்பமுள்ளவர்கள் massagetherapist@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களை விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க:மக்களே அலர்ட்.. மாதந்தோறும் 1.30 லட்சம் வரை சம்பளத்தில் அரசுப் பணி.. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு..

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incpe.gov.in எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் வரும் 6 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.