Asianet News TamilAsianet News Tamil

பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் பணி.. 1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை.. முழு விவரம்

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 

job notification of Bharat petroleum 2022 for junior Executive vacancies
Author
India, First Published Aug 1, 2022, 5:52 PM IST

பணியிடங்கள்:

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் https://www.bharatpetroleum.in/ என்ற இணையதளத்தின் மூலம் சென்று பணியிடங்களுக்கு ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் மற்றும் கல்வித்தகுதி : 

தற்போது  பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பதவிக்கு மாதந்தோறும் சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். மெக்கானிக்கல்‌, எலக்ட்ரிக்கல்‌, சிவில்‌, கெமிக்கல்‌, எலக்ட்ரானிக்ஸ்‌ போன்ற ஏதாவதொரு பிரிவில்‌ பொறியியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன்‌ பிஇ அல்லது பி.டெக்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் படிக்க:35,000 சம்பளத்தில் விளையாட்டு ஆணையத்தில் பணி.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்

தகுதி மற்றும் வயது வரம்பு: 

அதுமட்டுமல்லமால் நான்கு ஆண்டுகள்‌ பணி அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. மேலும் வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தது 30 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல் Junior Executive (Accounts) பணியிடங்களுக்கு சிஏ, சிஎம்‌ஏ போன்ற ஏதாவதொரு படிப்பை முடித்து 5 ஆண்டுகள்‌ பணி அனுபவம்‌ பெற்றிருக்க
வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்:

இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்ற்கு விண்ணப்பம் செய்வதற்கு ரூ.500 கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மேலும் இதிலிருந்து எஸ்சி, எஸ்டி மற்றும்‌ மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:காலியாக 1,089 அரசு பணியிடங்கள்.. நவம்பர் 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வு.. எப்போது..? எப்படி விண்ணப்பிப்பது..?

Follow Us:
Download App:
  • android
  • ios