மொத்தம் 1500 காலியிடங்கள்.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. இந்தியன் வங்கியில் வேலை..

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Indian Bank Apprentice Recruitment 2024,: Notification for 1500 posts Rya

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை ஏற்கனவே தொடங்கிய விண்ணப்பிப்பதற்கு நாளையே கடைசி நாளாகும். 

இந்தியன் வங்கியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் காலியிடங்கள் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் 277 பணியிடங்களுக்கும் ஆந்திராவில் 82 இடங்களும், அசாமில் 29 இடங்களும், ஹரியானாவில் 37 இடங்களும் என நாடு முழுவதும் மொத்தம் 1500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

தேர்வு இல்லை.. இண்டர்வியூ இல்லை.. இந்திய ரயில்வேயில் 2,438 காலியிடங்கள்.. முழு விவரம் இதோ..

அப்ரண்டிஸ் கல்வித் தகுதி 

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள் 31.03.2020க்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அதற்கானதேர்ச்சிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.07.2024 தேதியின்படி விண்ணப்பதாரர்களுகளின் வயது வரம்பு 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு விதிமுறைகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படுகிறது. 

பதிவு கட்டணம்

அப்ரண்டிஸ் பதவிகளுக்கு பொது/OBC/EWS விண்ணப்பதாரர்கள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் டெபிட்/கிரெடிட் கார்டுகள் அல்லது இணைய வங்கி சேவையைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

விண்ணப்ப தேதி

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 10.07.2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2024

இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆக.14ஆம் தேதி தொடக்கம்

தேர்வு செயல்முறை :

ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி புலமைத்தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வு செயல்முறை இருக்கும். 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு: ஆங்கிலத்தில் உள்ள பொது ஆங்கிலம் பிரிவைத் தவிர, பல பிராந்திய மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படும். பகுத்தறிவு திறன் மற்றும் கணினி அறிவு, பொது ஆங்கிலம், அளவு திறன் மற்றும் பொது நிதி விழிப்புணர்வு ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்படும். 

உள்ளூர் மொழி புலமைத் தேர்வு: விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை திறம்பட படிக்க, எழுத, பேச மற்றும் புரிந்துகொள்ள முடியுமா என்பதை சரிபார்க்க இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த தேர்வு நடைபெறும். 8, 10 அல்லது 12 ஆம் வகுப்பில் உள்ளூர் மொழியைப் படித்த விண்ணப்பதாரர்கள் இந்தத் தேர்வை எழுத தேவையில்லை.

அப்ரண்டிஸ் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 ஆண்டுக்கு உதவித்தொகை உடன் பயிற்சியும் வழங்கப்படும். மெட்ரோ மற்றும் நகர்ப்புற கிளைகளில் பயிற்சி பெற மாதம் ரூ.15000 உதவித்தொகையும், கிராமம் அல்லது புறநகர் கிளையில் பயிற்சி பெறுவோருக்கு ரூ.12,000 உதவித்தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ இணையதளம் - indianbank.in
அதிகாரப்பூர்வ அறிவிப்பு - பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்ப இணைப்பு - விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios