தேர்வு இல்லை.. இண்டர்வியூ இல்லை.. இந்திய ரயில்வேயில் 2,438 காலியிடங்கள்.. முழு விவரம் இதோ..
தெற்கு ரயில்வேயில் உள்ள 2,438 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்துத்துறையான இந்திய ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது தெற்கு ரயில்வேயில் உள்ள 2,438 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஃபிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் அப்ரெண்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆக.14ஆம் தேதி தொடக்கம்
வயது வரம்பு : 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது :
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள அப்ரெண்டிஸ் பணிகளுக்கு ஆன்லனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்ப்போர் https://sr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் உள்ள ஆட்சேர்ப்பு லிங்கை கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவு கட்டணம்
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம். SC/ST/PWD/பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப தேதி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 22.07.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.08.2024
SSC Stenographer Exam: எஸ்எஸ்சி ஸ்டெனோகிராபர் கிரேடு.. வேலைக்கு விண்ணப்பிங்க.. அப்ளை செய்வது எப்படி?
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது 10ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அல்லது ஐடிஐ படிப்பில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செயல்முறையில் எழுத்துத் தேர்வுகள் அல்லது நேர்காணல்கள் எதுவும் இல்லை. மேலும் உடல் பரிசோதனைகள் தேர்வும் மேற்கொள்ள வேண்டியது. தேர்வு செயல்முறை முற்றிலும் தகுதி அடிப்படையிலானது, கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகளால் தீர்மானிக்கப்படுகிறது.