சென்னை ஐஐடியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை கிண்டியில் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) செயல்பட்டு வருகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த கல்வி நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது சென்னை ஐஐடியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

64 ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.03.2024 ஆகும். ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் https://recruit.iitm.ac.in/.அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சென்ட்ரல் வங்கியில் வேலை வாய்ப்பு.. 3000 காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு தகவல்!

காலியிட விவரங்கள்:

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள 64 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 4குரூப் ஏ பதவிகளுக்கு காலியிடங்களும், குரூப் பி பதவிகளுக்கு 16 காலியிடங்களும், குரூப் சி பதவிகளுக்கு 44 காலியிடங்களும் உள்ளன. அதன்படி, தலைமை பாதுகாப்பு, உதவி பாதுகாப்பு அலுவலர், உதவி பதிவாளர், சமையலர், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி :

சமையலர் பணிக்கு பி.எஸ்சி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமை வைத்திருக்க வேண்டும். பாதுகாவலர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும். பாதுகாப்பு அதிகாரி, உதவி பணியாளர் பணியிடங்களுக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து பணியிடங்களுக்குமான கல்வி தகுதியை தேர்வு அறிவிப்பில் பார்த்து விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ரூ.40,000 வரை சம்பளம்.. பெல் நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பக் கட்டணம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ. 500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PwD பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. .

எப்படி விண்ணப்பிப்பது?

  • https://www.iitm.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
  • முகப்புப் பக்கத்தில், Career தாவலைக் கிளிக் செய்யவும்
  • பின்னர் Non Teaching Position என்பதை கிளிக் செய்யவும்
  • அடுத்து, Apply Online என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்
  • விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
  • தேவையான அனைத்து விவரங்களையும் பதிவேற்றவும்
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
  • தேவையான அனைத்து விவரங்களையும் பதிவேற்றவும்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்