IBPS-PO 2022: ஒரே ஒரு டிகிரி இருந்தாகூட போதும்.. வங்கியில் வேலை, 6432 காலிப் பணியிடம் அறிவிப்பு..
IBPS-PO 2022 இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனல் செலக்சன் ப்ரோபேஷனரி அதிகாரி PO மற்றும் மேலாண்மை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
IBPS-PO 2022 இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனல் செலக்சன் ப்ரோபேஷனரி அதிகாரி PO மற்றும் மேலாண்மை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ibps.in என்ற இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலி பணியிடங்கள்:
மொத்தம் 6432 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் மாதமும் அதற்கான முதற்கட்ட தேர்வு முடிவுகள் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி தேர்வுக்கான தேதிகள் விரைவில் IBPS ஆல் அறிவிக்கப்படும்.
இதையும் படியுங்கள்: பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் பணி.. 1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை.. முழு விவரம்
கல்வித்தகுதி: தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தபட்சம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது: 1, 2022 அன்று விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது உடையவராகவும், அதிகபட்சம் 30 வயது உடையவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.
IBPS பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி:
அதிகாரப்பூர்வ வலைதளமான ibps .in-ஐ கிளிக் செய்து உள்ளே நுழைந்து, பின்னர் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பை கிளிக் செய்ய வேண்டும், பின்னர் அதில் விண்ணப்பதாரர்கள் விவரங்களை பதிவிட வேண்டும். விண்ணப்ப படிவத்தை நிரப்பிய உடன் அதற்கான சான்றுகளை பதிவேற்ற வேண்டும், பின்னர் உரிய கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் மற்றும் அறிவிப்பு கட்டணமாக 850 ரூபாய் செலுத்த வேண்டும், எஸ்சி எஸ்டி மற்றும் PWBD பிரிவைச் சார்ந்தவர்கள் 175 ரூபாய் செலுத்தினால் போதும்.
IBPS PO2022 தேர்வுமுறை:
பிரிலிம்ஸ் ஒரு மணி நேரத்திற்கு CBT (கணினி அடிப்படையிலான தேர்வு) முறையில் நடத்தப்படும். தலா ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்,
இதையும் படியுங்கள்: 35,000 சம்பளத்தில் விளையாட்டு ஆணையத்தில் பணி.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்
தீர்மானிக்கப்படும் ஒவ்வொரு பிரிவிலும் போதுமான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நான்கில் ஒரு பங்கு அல்லது அந்த கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பெண்களில் 0.25 கழிக்கப்படும். முதன்மைத் தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் பின்னர் நேர்காணல் சுற்றுக்கு அழைக்கப்படுவார்.