HCL நிறுவனத்தில் வேலை; சென்னையில் இன்று முதல் இண்டர்வியூ!

சென்னை நாவலூரில் உள்ள HCL நிறுவனத்தில் Bereavement Specialist பணிக்கு நேர்காணல் ஜனவரி 7 முதல் 10 வரை நடைபெறும். டிகிரி மற்றும் 2-4 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HCL Recruitment Walkin Interview for Bereavement specialist in chennai from january 7 Rya

சென்னை நாவலூரில் செயல்பட்டு வரும் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் இன்று முதல் நடைபெற உள்ளது. வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த நேர்காணலில் ஆர்வமும் தகுதியும் உள்லவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம்.

சென்னை நாவலூரில் செயல்பட்டு வரும் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் தற்போது Bereavement Specialist பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படித்திருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட துறையில் 2 முதல் 4 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் கொண்டிருக்க வேண்டும். இமெயில் அனுப்பவும், கடிதம் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு கிடையாது: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை

எந்த ஷிப்டில் பணியாற்றவும் தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 7 முதல் 10-ம் தேதி வரை மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை நடைபெறும். பணி அனுபவத்தை பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படலாம். 
இண்டர்வியூ நடைபெறும் : HCL டெக்னாலஜிஸ் லிமிடெட். ETA 3- டெக்னோ பார்க், சிறப்புப் பொருளாதார மண்டலம், 33, ராஜீவ் காந்தி சாலை, நாவலூர் கிராமம் மற்றும் பஞ்சாயத்து, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், நாவலூர், தமிழ்நாடு 603103
பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் நாவலூர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.

பெரியார் பல்கலைக்கழகம் நவம்பர் 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios