பெரியார் பல்கலைக்கழகம் நவம்பர் 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
பெரியார் பல்கலைக்கழகம் நவம்பர் 2024 இல் நடத்தப்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்கலாம்.
நவம்பர் 2024 அமர்வின் போது நடத்தப்பட்ட இளங்கலை (யுஜி) மற்றும் முதுகலை (பிஜி) தேர்வுகளுக்கான முடிவுகளை பெரியார் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுகளுக்குத் தோற்றிய மாணவர்கள் இப்போது பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான periyaruniversity.ac.in மூலம் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளைப் பார்க்க, விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
பெரியார் பல்கலைக் கழகம் - தேர்வு முடிவு
- மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை விரைவாகப் பெற பின்வரும் படிகளைப் பின்பற்றலாம்.
- அதிகாரப்பூர்வ இணையதளமான periyaruniversity.ac.inக்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள “நவம்பர் 2024 தேர்வுகள் UG/PG முடிவுகள்” இணைப்பைக் கண்டறிந்து கிளிக் செய்யவும்.
- பிறகு ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
- விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, நவம்பர் 2024 தேர்வுகளுக்கான உங்கள் தேர்வு முடிவுகள் (ஸ்கோர்கார்டு) திரையில் காட்டப்படும்.
- பிறகு தேர்வு முடிவைச் சேமித்து, எதிர்கால தேவைக்காக ஒரு பிரிண்ட்அவுட்டை எடுக்கவும்.
உங்கள் தேர்வு முடிவில் சரிபார்க்க வேண்டிய முக்கிய விவரங்கள்
முடிவைப் பதிவிறக்குவதற்கு முன், துல்லியத்தை உறுதிப்படுத்த பின்வரும் விவரங்களைச் சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
- மாணவர் பெயர் மற்றும் ரோல் எண்
- பாடங்கள் மற்றும் தொடர்புடைய மதிப்பெண்கள்
- மொத்த மதிப்பெண்கள்
- குறிப்புகள் (ஏதேனும் இருந்தால்)
ஏதேனும் தவறுகள் / பிழைகள் காணப்பட்டால், மாணவர்கள் உடனடியாக பல்கலைக்கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு திருத்தம் செய்ய வேண்டும். நவம்பர் 2024 தேர்வு முடிவுகள் தொடர்பான சமீபத்திய அப்டேட்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவறாமல் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்