இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாய்ப்பு.. மாதம் ரூ.1,40,000 சம்பளம்..
Manage (Hindi) பணிக்கு 35 வயதிற்கு மிகாதவராகவும்,, மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியம்.
இந்திய உணவுக் கழகம் (FCI)-ல் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 113 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. . தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.1,40,000/- வரை சம்பளம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் கீழே..
நிறுவனம் | Food Corporation of India (FCI) |
பணியின் பெயர் |
Manager |
பணியிடங்கள் |
113 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
26.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
மேலும் செய்திகளுக்கு....12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு..எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்திய உணவுக் கழகம் காலிப்பணியிடங்கள்:
இந்திய உணவுக் கழகத்தில் (FCI) General, Depot, Movement, Accounts, Technical, Civil Engineering, Electrical Mechanical Engineering, Hindi உள்ளிட்ட துறைகளுக்கான Manager பணியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளது.
Manager (North Zone) – 38 பணியிடங்கள்
Manager (South Zone) – 16 பணியிடங்கள்
Manager (West Zone) – 20 பணியிடங்கள்
Manager (East Zone) – 21 பணியிடங்கள்
Manager (North-East Zone) – 18 பணியிடங்கள்
மேலும் செய்திகளுக்கு...ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு... Degree இருந்தால் போதும்..
கல்வி தகுதி:
பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, BE, B,Tech, Post Graduate, MBA Degree ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Manage (Hindi) பணிக்கு 35 வயதிற்கு மிகாதவராகவும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியம்.
மேலும் செய்திகளுக்கு...UPSC வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா?
சம்பள விவரம் :
குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை மாத சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
Online Test, Interview மற்றும் Training ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.800/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்