மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் உள்ள 1930 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐசி என்ற தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காலிப்பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசின் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் உள்ள 1930 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நர்சிங் ஆபிசர் பணிக்கு 1930 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொதுப்பிரிவினர் 892 பேர், EWS பிரிவினர் 193 பேர், ஓபிசி பிரிவினர் 446 பேர், எஸ்.சி பிரிவினர் 235 பேர், எஸ்.டி பிரிவினர் 164 பேர், PWD பிரிவினர் 168 பேர் என மொத்தம் 1930 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

மாதம் ரூ.70 ஆயிரம் ஊதியம்.. ட்ரைவர் முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை.. மத்திய அரசு வேலையில் சேர வாய்ப்பு

வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற வயதினருக்கு அரசு விதிகளின் படி தளர்வு இருக்கும். அதன்படி ஓபிஎசி பிரிவினர் 33 வயது வரையும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 35 வயது வரையும், PWD பிரிவினர் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். 

கல்வித்தகுதி :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ.42,300 முதல் ரூ.63,300 வரை வரை.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் மார்ச் 7 முதல் மார்ச் 27 வரை விண்ணப்பிக்கலாம். இஎஸ்ஐசி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

தென்னக ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 2860 பணிகளுக்கு உடனே ஆட்கள் தேவை - எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பக்கட்டணம் : 

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100 விண்ணப்பக்கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. 

தேர்வு முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, மெடிக்கல் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள்.