Asianet News TamilAsianet News Tamil

குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுக்கான அசல் சான்றிதழ்களை பதிவு செய்ய இ-சேவை மையங்கள் திறப்பு..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக  இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

E-Service Centers Open for Registration of Original Certificates for Group-2 and 2A Mains
Author
First Published Dec 3, 2022, 1:36 PM IST

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக  இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதல்நிலைத் தேர்வு (TNPSC GROUP II&IIA MAIN EXAMINAION) முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- சொன்ன நம்பமாட்டீங்க.. மாதம் ரூ.69,000 சம்பளம் .. 10, 12 முடித்தாலே போதும்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!

மேலும் தேவைப்படும் இ சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண்:  1800 425 2911 - ஐ தொடர்பு கொள்ளலாம். 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு: 
குரூப் 2/2ஏ காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு) 2023, பிப்ரவரி 25ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெற உள்ளது.  16.12.2022-க்குள் இந்த சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கு கட்டயாம் அனுமதிக்கப்படமாட்டார்கள்.  அதேபோன்று, 15.12.2022-க்குள் விண்ணப்பதாரர்கள் 150 ரூபாய் தேர்வு கட்டணமாக  செலுத்த வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- ஆண்டுக்கு ரூ 19.50 லட்சம் சம்பளம்..? எஸ்.பி.ஐ வங்கியில் வேலை..! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா..?

Follow Us:
Download App:
  • android
  • ios