ஆண்டுக்கு ரூ 19.50 லட்சம் சம்பளம்..? எஸ்.பி.ஐ வங்கியில் வேலை..! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா..?

பாரத ஸ்டேட் வங்கியில் ஆண்டுக்கு 19.50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் மேலாளர் பதவிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. வருகிற 12 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.

SBI Bank has published a notification to apply online for the post of Manager

எஸ்பிஐ வங்கியில் பணி

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிடும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படு வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியானது Specialist cadre officer பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.  இதற்காக ஆண்டு சம்பளமாக 19.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  அதன் படி ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)யில்  65 Specialist cadre officer(Manager, Circle Advisor)பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

SBI Bank has published a notification to apply online for the post of Manager


ஆண்டு்க்கு 19.50 லட்சம் சம்பளம்

இந்த பதவியடங்களுக்கு கல்வி தகுதியாக  ஏதாவதொரு பிரிவில் பட்டம், பிஇ., பி.டெக். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் எம்சிஏ, எம்பிஏ, பிஜிடிஎம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 62 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு 19.50 லட்சம் ரூபாய் சம்பளம்  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை  பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் 760 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிராம உதவியாளர், தலையாரி பணிக்கு தேர்வு.! ராமநாதபுரத்தில் தேர்வு நடைபெறும் இடம் எது.?மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

SBI Bank has published a notification to apply online for the post of Manager
விண்ணப்பிக்க கடைசி தேதி ?

Specialist cadre officer(Manager, Circle Advisor)பணியிடங்களுக்கு ஆட்கள்  நேர்முகத் தேர்வு மூலம் மற்றும் ஒப்பந்த செய்யப்படுவார்கள் என கூறப்படுள்ளது. https://bank.sbi/careersஎன்ற இணையதள முகவரியில் வருகிற 12.12.2022ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு… மதிப்பெண்கள் குறித்து முழு விவரம் உள்ளே!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios