பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவகம் (DRDO) CEPTAM 11 2025-ன் கீழ் 764 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்-பி மற்றும் டெக்னீசியன்-ஏ பதவிகளுக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

நல்ல சம்பளத்துடன் வேலை காத்தருக்கு மக்களே

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவகம் (DRDO) CEPTAM 11 2025க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 764 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Senior Technical Assistant-B – 561 பணியிடங்கள் மற்றும் Technician-A – 203 பணியிடங்கள் அடங்கும். இந்தியாவின் பல இடங்களில் பணியமர்த்தப்படவுள்ள இந்த மத்திய அரசுத் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் பதிவு 09.12.2025 முதல் துவங்கும். கடைசி நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகுதி விவரங்கள்

கல்வித்தகுதி

Senior Technical Assistant-B – சம்பந்தப்பட்ட துறையில் B.Sc/என்ஜினியரிங் டிப்ளமோ

Technician-A – 10th + NCVT/SCVT அங்கீகாரம் பெற்ற ITI

வயது வரம்பு: இரு பதவிகளுக்கும் 18 – 28 வயது. அரசு விதிமுறைகளின்படி SC/ST +5 வருடம், OBC +3 வருடம், PwBD வகைகளிற்கு கூடுதல் வயது தளர்வு வழங்கப்படும்.

சம்பள விவரம்

STA-B – Level 6 : ₹35,400 – ₹1,12,400/-

Technician-A – Level 2 : ₹19,900 – ₹63,200/-

மேலும் மருத்துவ காப்பீடு, PF, TA/DA போன்ற நலன்களும் வழங்கப்படும்.

தேர்வு முறைகள்

Tier-I – கணினி வழி தேர்வு (CBT)

Tier-II – Trade Test

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான drdo.gov.in-ல் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். 09.12.2025 முதல் விண்ணப்பம் தொடங்கும், கடைசி நாள் பின்னர் அறிவிக்கப்படும். DRDO போன்ற உயர்ந்த மத்திய அரசு அமைப்பில் பணிபுரியும் வாய்ப்பு இது. தகுதியானோர் தவறாமல் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்!