Asianet News TamilAsianet News Tamil

க்யூட் தேர்வு முடிவுகள் வெளியானது.. மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி..? விவரம் இங்கே

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (CUET) முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று அதிகாலை வெளியிட்டது. 
 

CUET UG Result 2022 out - How to download scorecard, direct link here..
Author
First Published Sep 16, 2022, 10:56 AM IST

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேருவதற்கு மத்திய பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 2022 - 23 நடப்பு கல்வியாண்டின் புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான க்யூட் தேர்வு கடந்த ஜுலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை ஆறு கட்டங்களாக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டது.நாடு முழுவதும் 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் 54,555 இடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. 

மேலும் படிக்க:CUET UG 2022 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. மதிப்பெண் பட்டியல் பதவிறக்கம் செய்வது எப்படி..? விவரம் இங்கே

நாடு முழுவதும் 500 நகரங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் இந்த தேர்வு நடைபெற்றது. தமிழ், இந்தி ,ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடந்தது. கடந்த செப்.8 ஆம் தேதி க்யூட் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு என்டிஏ-வால் வெளியிடப்பட்டது. உத்தேச விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கும் வகையில் செப்.10 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி இரவு 10 மணிக்கு க்யூட் தேர்வு முடிவுகள் என்டிஏவால் வெளியிடப்படும் என்றும் பல்கலைக்கழக மானிய குழு ஜெகதீஷ் குமார் அறிவித்தார். ஆனால் இளங்கலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2022 முடிவுகள் இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. 

மேலும் படிக்க:நீட் முதுகலை கலந்தாய்வு இன்று தொடக்கம்.. தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமானவை.. விவரம் இங்கே..

தேர்வு முடிவுகளை மாணவர்கள் cuet.samarth.ac.in. என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.  முகப்பு பக்கத்தில்"CUET UG Exam 2022 முடிவுகள்” என்ற இணையதள பக்கத்தை க்ளிக் செய்து, தேர்வர்கள் தங்களது விண்ணப்பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் தேர்வு எழுதியவர்களின் விவரங்கள் தொடர்புடைய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தாங்கள் சேர விரும்பும் பல்கலைக்கழகங்களை தொடர்புக் கொண்டு, மாணவர் சேர்க்கையினை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:ஆதார் துறையில் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இங்கே !!

Follow Us:
Download App:
  • android
  • ios