தேர்வர்களே அல்ர்ட் !! தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு ரத்து.. மாற்று தேதியை அறிவித்த என்டிஏ
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்ய CUET நுழைவுத்தேர்வில் இரண்டாம் கட்ட தேர்வு வரும் ஆகஸ்ட் 12,14ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் CUET எனும் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. 12ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இளநிலைப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க:அலர்ட்!! UPSC மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. தேர்வர்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..
சியுஇடி நுழைவுத் தேர்வு கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடம் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 554 நகரங்களில் அமைந்துள்ள மையங்களிலும், அயல்நாட்டில் 15 நகரங்களிலும் தேர்வு நடத்தப்படுகிறது. 43 மத்திய பல்கலைக்கழகங்கள், 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 86 உயர்கல்வி நிறுவனங்கள் இந்த பொது நுழைவத் தேர்வின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்தவுள்ளன. நாடு முழுவதும் இந்த தேர்வ்சை மொத்தம் 6.8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
மேலும் படிக்க:மாணவர்கள் கவனத்திற்கு !! அரசு கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை ?
இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஜுலை மாதம் 15, 16, 19, 20 ஆகிய நாட்களில் முதல் கட்ட தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 4, 5, 6, 7, 8,10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் CUET யின் 2ம் கட்ட நுழைவுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதனிடையே நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 2வது ஷிப்ட்டில் இன்று நடைபெற இருந்த தேர்வு இன்று நடைபெறவில்லை.
மேலும் படிக்க:முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 2,207லிருந்து 3,237 ஆக அதிகரிப்பு… அறிவித்தது டி.ஆர்.பி!!
மேலும் அனைத்து மையங்களிலும் இன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், மாற்று தேதியில் தேர்வு நடத்தப்படுமென்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறால் 50,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட CUET நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12,14ம் தேதிகளில் நடைபெறும் என்டிஏ தெரிவித்துள்ளது.