10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! அரசு வேலையில் சேர நல்ல சான்ஸ்! உடனே அப்ளை பண்ணுங்க!

கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒன் ஸ்டாப் சென்டரில் கேஸ் பணியாளர், செக்யூரிட்டி, உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Coimbatore OSC Recruitment 2024 : Apply for case worker and other posts Rya

குழந்தைகள் முதல் வயதான பெண்மணிகள் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கல்வி, வேலைக்காக வெளியே செல்லும் பெண்கள் தங்கள் வேலை செய்யும் இடங்கள் அல்லது பள்ளி, கல்லூரிகளில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்படி பாதிக்கப்பட்டும் பெண்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் ஒன் ஸ்டாப் செண்டர் திட்டம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்முறை, வரதட்சணை கொடுமை, கட்டாய திருமணம், கட்டாய கருக்கலைப்பு, காதல் பிரச்சனை, பிளாக் மெயில் ஆகியவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்ய 24 மணி நேரமும் உதவி மையம் தான் இந்த ஒன்ஸ்டாப் செண்டர். 

10வது படித்தவர்களுக்கு கை நிறைய சம்பளம்; 3883 வேலைகள் - 1 வாரம் தான் இருக்கு!

பொது இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள் 181 என்ற இலவச எண் மூலம் ஒன் ஸ்டாப் செண்டரை தொடர்பு கொள்ளலாம். இந்த மையம் பெண்களுக்கு மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல்துறையில் புகார் அளிக்க உதவுவதல் போன்ற சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது. 

இந்த ஒன் ஸ்டாப் செண்டரில் உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒன் ஸ்டாப் செண்டரில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

TMB Bank Recruitment 2024: தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் வேலை! சம்பளம் எவ்வளவு கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

கேஸ் பணியாளர், செக்யூரிட்டி, உதவியாளர் ஆகிய பணிகளுக்கு 5 காலியிடங்கள் உள்ளன. 21 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கேஸ் பணியாளருக்கு மாதம் ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். செக்யூரிட்டிக்கு மாதம் ரூ. 12,000, உதவியாளர்களுக்கு மாதம் ரூ.10000 சம்பளம் வழங்கப்படும். 

கேஸ் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், M.A, MSW பிரிவில் சமூகவியல், உளவியல் அல்லது மருத்துவ உளவியல் படித்து முடித்திருக்க வேண்டும். செக்யூரிட்டி, உதவியாளர் பணிகளுக்கு 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 

இந்த பணிகளுக்கு விண்ண்பிக்க கடைசி நாள் 20.11.2024 ஆகும். ஒன் ஸ்டாப் செண்ட்ரில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி சேய்ய வேண்டி இருக்கும். ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் www.coimbatore.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios