TMB Bank Recruitment 2024: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை! சம்பளம் எவ்வளவு கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 170 சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதுகலை பட்டதாரிகள் நவம்பர் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.32,000 முதல் ரூ.72,061 வரை.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. 1921ம் ஆண்டு தமிழக நாடார் சமுகத்தினரால் நாடார் வங்கி என வியாபார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டு வணிக மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என பெயர் மாற்றப்பட்டது. இந்த வங்கி தற்போது இந்தியா முழுவதும் 509 முழு கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்க கவுண்டர்களையும், 1094 தானியங்கி டெல்லர் இயந்திரங்களையும் (ஏடிஎம்) கொண்டுள்ளது. இந்த வங்கி இந்தியா முழுவதும் தனது கிளைகளை விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் (SCSE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன என்பதை பார்க்கலாம்.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதிய திட்டம்! கைவிரித்த முதல்வர் ஸ்டாலின்? ஏமாற்றப்பட்ட அரசு ஊழியர்கள்! சொல்வது யார் தெரியுமா?
சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் - மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பணியிடங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருப்பது முக்கியம்.
விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் மாதம் ரூ.32,000 முதல் ரூ.72,061 வழங்கப்படும்.
ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு என இரண்டு கட்ட தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு நாடு முழுவதும் உள்ள சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறும்.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் இனி தப்பிக்கவே முடியாது! சாட்டையை சுழற்றும் கல்வித்துறை!
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்ப கட்டணம் ரூ.1,000-ஆகும். ஆன்லைன் வழியாக கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 27ம் தேதியாகும். ஆன்லைன் வழியான எழுத்து தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.